புடலங்காய் கூட்டு

இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 

சமர்ப்பணம்  திருமதி
  ச. கிருஷ்ணவேணி


தேவையான பொருட்கள்

புடலங்காய்            - 300 கிராம்
கடலைப் பருப்பு  -    100 கிராம்
வெங்காயம்               1
தக்காளி                       2
பச்சை மிளகாய்       2
 இஞ்சி பூண்டு விழுது 1 தே கரண்டி
உப்பு                               தேவையான அளவு

தாளிக்க

கடுகு                          சிறிதளவு
சீரகம்                         சிறிதளவு
வெந்தயம்                சிறிதளவு
எண்ணை  தேவையான அளவு

செய்முறை 

கடலைப்பருப்பை ஊறவைத்து வேகவைத்தது கொள்ளவும்.
புடலங்காயை  சிறு சிறு துண்டுகளாக  நறுக்கி தனியாக் வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலியை  சூடாக்கி எண்ணை ஊற்றி கடுகு சீரகம் வெந்தயம் தாளித்து நறுக்கி  வைத்துள்ள  வெங்கயம்., பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து  வெங்காயம் பொன்னிரமாதும்  நறுக்கிய  தக்காளியை  சேர்த்து    வேகவைத்த கடலைப்பருப்பை புடலங்காயை உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தததும் மல்லி தழை சேர்த்து இறக் கிவிடவும்

No comments:

Post a Comment