Monday, 4 November 2013

சுவையோ சுவை- காரக்குழம்பு


இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 



சமர்ப்பணம் திருமதி. கிருஷ்ணவேணி

நான் தயார் செய்யும் சாம்பார் பொடி 
தேவையான பொருட்கள்
தனியா                 1 கிலோ
குண்டு மிளகாய்          1/2 கிலோ
மிளகு                             150 கிராம்
மஞ்சள்                           100 கிராம்
கடுகு                              50 கிராம்
வெந்தியம்                      25 கிராம்
ப. அரிசி                50 கிராம்
பு. அரிசி                          100 கிராம்
க்.பருப்பு                          50 கிராம்
து.பருப்பு                         100 கிராம்
கருவேப்பிலை சிறிது 
செய்முறை
மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வாணலியை சூடாக்கி வறுத்துக்கொள்ளாவும் இவற்றை ஒரு தூக்கில் எடுத்து சென்று மிளகாய் அரவையில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் நன்றாக ஆறிய பின்னர் தூக்கில் வாரி எடுத்துக்கொள்ளவும்.


காரக்குழம்பு செய்வதெப்படி

தேவையானப் பொருட்கள்
உப்பு தேவையானஅளவு  
புளி - நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி 4 மேஜைக் கரண்டி
சின்ன வெங்காயம் 10
பூண்டு 12 பல்
தக்காளி பெரியது 2

நறுக்கிய பெரிய வெங்காயம் 1  

 தாளிக்க
கடுகு                1 தேநீர் கரண்டி
வெந்தையம்   10 கிராம்
சீரகம்               1 தேநீர் கரண்டி
மஞ்சள் பொடி   1/2 தேநீர் கரண்டி

 எண்ணெய் ஒரு குழி கரண்டி



செய்யும் முறை



புளியை கொதிக்கும் நீரில் கொஞ்ச நேரம் ஊறவைத்த பின் நன்றாக கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவேண்டும்.இத்துடன் சாம்பார் பொடியையும் உப்பையும் மஞ்சள் பொடியையும் சேர்த்து பின் ஒரு தே.கரண்டியில் எடுத்து ருசி பார்க்கவும் புளியின் சுவையும் காரத்தின் சுவையும் சம அளவில் இருக்க வேண்டும். இல்லையெனில் குறைவாக உள்ளதை சேர்க்க வேண்டும்.  
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை கடுகு - சீரகம் வெந்தையம் தாளித்து   5 கிராம்.  கடுகு சீரகம், வெந்தையம் நன்கு பொரிய  வேண்டும், தீய கூடாது சின்ன வெங்காயம் 10 நறுக்கிய  வெங்காயம், பூண்டு 12 பல் பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.  இதில் கரைத்து வைத்துள்ள குழம்பு கரைச்சலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும் பொங்கி பொங்கி கொதிக்க வேண்டும்  இறக்கிவிடவும் சுவையான காரகுழம்பு தயார்   

No comments:

Post a Comment