வத்தல் காரக்குழம்பு

இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 



சமர்ப்பணம்  திருமதி
  ச. கிருஷ்ணவேணி


புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
     மிளகாய் தூள்    - 4 தேக்கரண்டி (கலவை தூள்)
மஞ்சள் தூள்           - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - கால் கப்
பூண்டு                    - 5 பல்
தக்காளி                 - 2
கறிவேப்பிலை       - சிறிது
உப்பு                     - தேவையான அளவு
நீர்                        4 கப்                     

தாளிக்க:
எண்ணெய்      - தேவையான அளவு ( 1 1/2  குழிகரண்டி)
கடுகு               - அரை தேக்கரண்டி
                        வெந்தயம்         - அரை தேக்கரண்டி 
                        வடகம் அரை தேக்கரண்டி 
   

புளியை நன்கு ஊற வைத்து கரைத்து வடிக்கட்டி தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இத்துடன் சாம்பார் பொடி( அல்லது 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் 2 தே.கரண்டி மிளகாய் தூள் 3 தே.கரண்டி தனியா தூள்), உப்பு சேர்த்து ருசி பார்க்கவும் புளியின் சுவையும் காரத்தின் சுவையும் சம்மாக இருக்க வேண்டும் அப்படியில்லையெனில் கொஞ்சம் புளி கரைசல் (அ) மிளகாய் தூள் சேர்க்கவேண்டும்.
வாணலியில் எண்ணைவிட்டு கடுகு வெந்தயம் கறிவேப்பிலை -தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும் சின்ன வெங்காயம் மலர்ந்து வரவேண்டும் பின் பெரிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வைத்திருத்ததை சேர்த்து நன்கு வதக்கிய பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும்.
 சுண்டைக்காய் வத்தலை  தனியாக் ஒரு சிறிய வாணலியில் சிறிது எண்ணைவிட்டு தீய்ந்து விடாமல் லேசான பொன்னிறத்தில் வதக்கி வைத்துக் கொள்ளவும் பின் இதனை  தாளிப்புடன் சேர்த்துக் கொள்ளவும்.  புளி கரைச்சலை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  நன்கு கொதிக்கும், கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் இறக்கிவிடவும், சுவையான வத்தல் காரக்குழம்பு தயார்.




No comments:

Post a Comment