Sunday, 3 November 2013

சுவையோ சுவை- சாம்பார் 1.வெண்டைக்காய் சாம்பார் 2.தக்காளி சாம்பார்

இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 


சமர்ப்பணம்  திருமதி
  ச. கிருஷ்ணவேணி


என் தாயார் சொல்லி கொடுத்து நான் தயார் செய்யும் சாம்பார் பொடி 

தேவையான பொருட்கள்
தனியா                 1 கிலோ
குண்டு மிளகாய்          1/2 கிலோ
மிளகு                             150 கிராம்
மஞ்சள்                           100 கிராம்
கடுகு                              50 கிராம்
வெந்தியம்                      25 கிராம்
ப. அரிசி                50 கிராம்
பு. அரிசி                          100 கிராம்
க்.பருப்பு                          50 கிராம்
து.பருப்பு                         100 கிராம்
கருவேப்பிலை சிறிது 
செய்முறை
மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வாணலியை சூடாக்கி வறுத்துக்கொள்ளாவும் இவற்றை ஒரு தூக்கில் எடுத்து சென்று மிளகாய் அரவையில் நன்றாக அரைத்துக் கொள்ளவும் நன்றாக ஆறிய பின்னர் தூக்கில் வாரி எடுத்துக்கொள்ளவும்.
1. வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி என்று பார்கலாம்


சமர்ப்பணம்  திருமதி
  ச. கிருஷ்ணவேணி

,
  • வெண்டைக்காய் - 250 கிராம்
  • பருப்பு - முக்கால் கப்
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • சாம்பார் வெங்காயம் - அரை கப்
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் - 3
  • மல்லித் தழை, கறிவேப்பிலை
  • உப்பு - தேவையான அளவு

  • தாளிக்க:
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - தேவையான அளவு


வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
து.பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு, மத்தால் கடைந்து குழைத்து வைத்துக்கொள்ளவும்
வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி சிறிதளவு எண்ணையில்
 நிறம் மாறாமல் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி  தாளித்து, வெங்காயம்,  பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பாதி மல்லித் தழை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்
தக்காளி வதங்கியதும் து.பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு குழைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து சாம்பார் பொடி 4 தேக்கரண்டி சேர்த்து,  உப்பு சேர்த்து பச்சை வாசனை தண்ணீர் சேர்த்து  போக கொதிக்கவிடவும் பின் பொரித்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து அதனுடன் புளியைக் கரைத்து ஊற்றி நன்றாக ஒரு கொதி வந்தவுடன் மீதியுள்ள மல்லித் தழையைத் தூவிஇறக்கிவிடவும் சுவையான சாம்பார் தயார்.


குறிப்பு: தேவையானால் பெருங்காயம் சேர்த்து செய்யலாம்
2. தக்காளி சாம்பார் செய்வதெப்படி ?
சமர்ப்பணம்  திருமதி
  ச. கிருஷ்ணவேணி


  • பருப்பு - முக்கால் கப்
  • சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி
  • பூண்டு 4 பல்      


  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • சாம்பார் வெங்காயம் - அரை கப்
  • தக்காளி - 4
  • பச்சை மிளகாய் - 3
  • மல்லித் தழை, கறிவேப்பிலை

  • தாளிக்க:
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு



வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
து.பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு, மத்தால் கடைந்து குழைத்துவைத்துக்கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி  தாளித்து, வெங்காயம், பூண்டு 4 பல் 
பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பாதி மல்லித் தழை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்
தக்காளி வதங்கியதும் து.பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு குழைத்துவைத்துள்ள கலவையை சேர்த்து சாம்பார் பொடி 4 தேக்கரண்டி சேர்த்து,  உப்பு சேர்த்து பச்சை வாசனை போக தண்ணீர் சேர்த்து
கொதிக்கவிடவும்  நன்றாக ஒரு கொதி வந்தவுடன் மீதியுள்ள மல்லித் தழையைத் தூவிஇறக்கிவிடவும்சுவையான சாம்பார் தயார்.
குறிப்பு      இரண்டு தக்காளிகளை பருப்புடன் வேகவைத்தும் இரண்டு தக்காளிகளை வாணலில் வதக்கியும் செய்தாலும் சுவையாக இருக்கும். தேவையானால் பெருங்காயம் சேர்த்து செய்யலாம்



                                                       



No comments:

Post a Comment