suvaiyao suvai வடைகறி


இந்த சுவையோ சுவையில் மிகவும் எளியமுறையில் சமையல் கலையை சொல்லிதர முயற்சிக்கிறேன் இந்த இடுகை சமையல் தெரிந்தவர்களுக்காக நிச்சயமாக இல்லை. 

வடைகறி

சமர்ப்பணம்  திருமதி
  ச. கிருஷ்ணவேணி


தேவைவயான பொருட்கள்

வடைக்காக

கடலைப் பருப்பு    1/2 கப்  ( இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும் )
மிளகாய் தூள்        1 தே கரண்டி(அல்ல்லது மிளகாய் 3)
மஞ்சள் தூள்          சிறிதளவு 
வெங்காயம்           ஒரு கைப்பிடி அளவு
எண்ணை                தேவையான அளவு
உப்பு                           தேவையான அளவு

குருமாவுக்காக

தேங்காய் பால்  (முதல் )        3/4 கப்
தேங்காய்பால் இரண்டாம் 1/4 கப்
*[சாம்பார் பொடி                        2 தேக்  கரண்டி

(அ ) மிளகாய் தூள் 1 1/2 தேக்கரண்டி + தனிய தூள் 3 தே கரண்டி + மஞ்சள்
 turmeric powder ஒரு சிடிட்கை]

வெங்காயம் பெரியது 1
இஞ்சி பூண்டு விழுது     1 தேக்கரண்டி
தக்காளி                             2
கொத்தமல்லி                சிறிதளவு

தாளிக்க
சோம்பு                             1/4 தேக்கரண்டி
பட்டை                             சிறிய துண்டு
கிராம்பு                              1
பிரிச்சி இலை             சிறியது

 செய்முறை

நன்கு ஊறிய கடலை பருப்பை மிசியில்  மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்து கொள்ளவும் சிறியதாக நறுக்கிய வெங்காயத்தை கலந்து பிசைந்து  வைத்துக் கொள்ளவும்
 வாணலியை சூடாக்கி  என்னை விட்டு பிரிஞ்சி இலை பட்டை, இலவங்கம் தாளித்து சிறியதாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டிசேர்த்து நன்கு  பச்சை வாசனை போகும் வரை வதக்க வும் பின் இத்துடுடன் தக்காளி சேர்த்து குழைந்து  வரும் வரை வதக்கவும்இத்துடன்   [சாம்பார் பொடி  2 தேக கரண்டி

(அ ) மிளகாய் தூள் 1 1/2 தேக்கரண்டி + தனிய தூள் 3 தே கரண்டி + மஞ்சள்
 turmeric powder ஒரு சிடிட்கை] சேர்த்து நன்கு வாசனை போகும் வரை கிளறி வதக்கவும் இத்துடன் தேங்காய் முதல் பால் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்.

இது கொதி   வரும் நேரத்தில் வேறு வாணலியில் எண்ணை தேவையான அளவு ஊற்றி வெங்கயத்தை  பருப்பை  கலந்து வைத்துள்ளதை  சிறு சிறு உருண்டையாக்கி பதமாக வறுத்து எடுக்கவும் ( சிறு சிறு உருண்டையாக்கி இட்லி பணியில் வேகவைத்தும் எடுக்கலாம் )

இந்த உருண்டைகளைக்  கொதித்துக் கொண்டிருக்கும் குருமாவில் போட்டு இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றவும் ஒரு கொதி  வந்தததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்

அருமையான சுவையான வடைகறி தயார்.

* குறிப்பு : கடையில் விற்கும் சாம்பார் போடி அல்ல என் தயாரிப்பு சாம்பார்

  




No comments:

Post a Comment